கனடாவின் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துகளால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, உடனடியாக உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள், அருவருப்பான இந்தியரே என்று கூறுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இன்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது.
இதனிடையே இங்கிலாந்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அந்தப் பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என்று அவர்கள் ஆக்ரோஷமாக கூறியுள்ளனர். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Disgusting display of racism in Burlington, ON.
Welcome 2 Canada. 🇨🇦 pic.twitter.com/1EKZzfA3Is
— EconomicWoes 🤖 (@ManyBeenRinsed) October 26, 2025
