திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திருச்சி என்பது தமிழகத்தின் இதயம், இந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்” என்று நெகிழ்ச்சியோடு தனது ஸ்பெஷல் நன்றியைத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணைய விதிகளின்படி தான் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் குறித்தும் அவர் அங்கிருந்த தொண்டர்களிடையே விளக்கினார்.
தனது தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை விஜய் கடுமையாகத் சாடினார். “ஆட்சிக்கு வந்த பிறகு 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்கள், இப்போது 6 நாட்கள் கூட சும்மா இருக்க முடியாமல் புலம்புகிறார்கள். நான் பதவியேற்ற நாளில் இருந்து அரை மணி நேரம் கூட ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களோ கல்யாண வீடுகளுக்குக் கூட சென்று அரசியல் புலம்பல்களை அரங்கேற்றி வருகிறார்கள்” என்று அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக-விற்கும் திமுக-விற்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பதை தெளிவுபடுத்தினார். மக்கள் தவெக-விற்கு ஓட்டு போட்டதை எதிர்க்கட்சியினர் ஏளனம் செய்வதைக் குறிப்பிட்ட விஜய், “ஓட்டு போட்ட மக்களை அரசியல் புரிதல் இல்லாத ‘தற்குறிகள்’ என்றும், ஏதோ கவர்ச்சியில் மயங்கி வாக்களித்து விட்டார்கள் என்றும் தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசுகிறார்கள். ‘கவர்ச்சியா? என்னா கவர்ச்சி? நான் என்ன… சரி விடுங்க’ என ஏதோ சொல்ல வந்தவர், பின்னர் புன்னகையுடன் பேச்சை நிறுத்தினார். இதனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மக்களை தற்குறி என்று சொல்பவர்களின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இலவச மின்சாரம் மற்றும் டாஸ்மாக் விவகாரங்களில் திமுகவின் பொய் பிரச்சாரங்களையும் விஜய் உடைத்துப் பேசினார். “நாங்கள் 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தோம். அதில் 100 யூனிட்டை திமுக கொடுக்கவில்லை, அது மேடம் ஜெயலலிதா கொடுத்துவிட்டுப் போனது. நீங்கள் டாஸ்மாக்கில் கொள்ளையடித்துக் கொண்டு, அந்த ஃபைல்களை மட்டும் குளோஸ் செய்ய நினைத்தீர்கள். ஆனால், நான் மக்களின் நலனுக்காக ஒட்டுமொத்த டாஸ்மாக்கையே குளோஸ் செய்துவிட்டேன்” என்று அதிரடியாகப் பேசி தனது உரையை நிறைவு செய்தார் முதல்வர் விஜய்.
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நடிகை திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், இணையத்தொடர்கள் (Web Series) மற்றும் குற்றப் பின்னணி கொண்ட காட்சிகளைப் பார்த்து ஈர்க்கப்பட்ட 17 வயது…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் குழந்தையைக் கீழே கட்டி வைத்துவிட்டு,…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் தகுதியற்ற பயனாளர்களைக் கண்டறிந்து நீக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு…
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற வதந்திகள், கோவையில் அவரது ஆதரவாளர்கள்…