உடனே தூக்கிப் போடுங்க..! கெமிக்கலா அல்லது இயற்கையா?… 90% பேருக்கு தெரியாத ரகசியம்… உங்கள் டூத்பேஸ்ட் கலர் கோடு சொல்லும் உண்மை…!!

By Gayathri on ஐப்பசி 10, 2026

Spread the love

தினமும் பல் துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் டியூப்பின் அடிப்பகுதியில் பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் சிறிய சதுரக் குறியீடுகள் இருப்பதை பலரும் கவனித்திருக்கலாம். இந்த நிறங்கள் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களைக் குறிக்கின்றன என்றும், பச்சை நிறம் இயற்கையான பொருட்களையும், கருப்பு நிறம் ரசாயனப் பொருட்களையும் குறிக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்தக் கூற்றுகளுக்குப் பின்னால் உள்ள உண்மை பலருக்கும் தெரியாது.

உண்மையில், டூத் பேஸ்ட் டியூப்பின் அடிப்பகுதியில் காணப்படும் இந்த நிறக் குறியீடுகள், உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் டியூப்பை சரியான இடத்தில் வெட்டவும், மடிக்கவும், சீல் செய்யவும் உதவும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக ஒளியியல் உணரிகள் அடையாளம் காணும் வகையில் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் பேக்கேஜிங் இயந்திரங்கள் டியூப்பின் சரியான நிலையை அறிந்து, உற்பத்திப் பணிகளைத் துல்லியமாகச் செய்ய முடியும்.

   

எனவே, டூத் பேஸ்ட் டியூப்பில் உள்ள பச்சை, நீலம், சிவப்பு அல்லது கருப்பு நிறக் குறியீடுகளை மட்டும் வைத்து அதில் இயற்கையான பொருட்கள் உள்ளனவா அல்லது ரசாயனப் பொருட்கள் கலந்துள்ளனவா என்பதைத் தீர்மானிக்க முடியாது. ஒரு டூத் பேஸ்ட்டின் மூலப்பொருட்கள், அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த விவரங்களை அறிய, டியூப்பில் அச்சிடப்பட்டுள்ள பொருட்களின் பட்டியலையும் தயாரிப்பு விவரங்களையும் படிப்பதே சரியான வழியாகும்.