Categories: அரசியல்

கர்நாடகா அரசு அதை செய்ய ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்க கூடாது – ஜிகே வாசன் வைத்த திடீர் கோரிக்கை!

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் (தா மா க) தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு 30 பேர் கொண்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது. இது தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் மெத்தன போக்காக இருந்து வருகிறது. இரு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பங்கீடு செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அவை விடுத்த ஆணையை கர்நாடக அரசு இதுவரை செயல்படுத்தாமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

அடுத்தக்கட்டமாக இப்போது 30 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மேகதாது அணை கட்ட அனுமதித்தால் தமிழக விவசாயிகள் மட்டுமல்ல, இரு மாநிலங்களுக்கும் இடையே நல்லுறவு பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு இனிமேலும் தாமதிக்காது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஜிகே வாசன் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

9 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago