தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இபிஎஸ்ஐ தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்த அவர் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்துள்ளார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில், அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர இருப்பதாகவும் 2026 இல் இபிஎஸ் மீண்டும் முதல்வராக மக்களால் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
