திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி…. பாஜக போட்ட மெகா ஸ்கெட்ச்…. அமித்ஷா கொடுத்த ‘ஆஃபர்’… அதிர்ச்சியில் ஸ்டாலின்….!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) சமீபத்தில் விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளன. கட்சியின் செயற்குழுவைக் கூட்டி கூட்டணியிலிருந்து விலகும் அறிவிப்பை ஜி.கே.வாசன் வெளியிட்ட போதிலும், “அடுத்து நமது அரசியல் பாதை என்ன?” என்ற நிர்வாகிகளின் கேள்விகளுக்கு அவரிடம் தெளிவான பதில் இல்லை எனத் தெரிகிறது. இதனால் எந்த திசையை நோக்கி பயணிப்பது என்று தெரியாமல் தமாகா தொண்டர்களும், நிர்வாகிகளும் தவித்து வருகின்றனர்.

இந்த அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமக்கு நம்பிக்கைக்குரிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் ஜி.கே.வாசன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் ஆலோசித்துள்ளார். அப்போது பேசிய பெரும்பாலான நிர்வாகிகள், “திமுக கூட்டணியில் தற்போது காங்கிரஸ் இல்லை என்பதால், நமக்கு அங்கு செல்வதில் எந்தத் தடையும் இல்லை. எனவே, மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” என்று யோசனை தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று வெற்றி பெறவும், கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் திமுக கூட்டணியே தற்போதைக்குச் சரியான தேர்வு என்பது இவர்களின் வலுவான வாதமாக உள்ளது. தவெக தலைவர் விஜய் மீதான மக்களின் ஆர்வம் தற்காலிகமானதுதான் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

   

மறுபுறம், பாஜக தரப்பிலிருந்து ஜி.கே.வாசனுக்கு ஒரு கவர்ச்சிகரமான “மெகா ஆஃபர்” கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் வாசனைத் தொடர்புகொண்டு, “கூட்டணியை விட்டு வெளியேறியதில் டெல்லி தலைமைக்கு வருத்தம் ஏதுமில்லை; மாறாக, தமாகாவை அப்படியே பாஜகவுடன் இணைத்துவிடுங்கள்” என்று தூண்டில் போட்டுள்ளார். மேலும், தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் செய்ய அமித்ஷா யோசித்து வருவதாகவும், கட்சியை இணைத்தால் வாசனே தமிழக பாஜகவின் தலைவராக முடியும் என்றும், இதற்குச் சம்மதித்தால் டெல்லியில் பேசி முடிப்பதாகவும் அவர் வலை விரித்துள்ளார்.

   

இப்படி ஒருபுறம் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொந்தக் கட்சி நிர்வாகிகள் அழுத்தம் கொடுக்க, மறுபுறம் பாஜகவில் இணைந்து மாநிலத் தலைவர் பதவியைப் பெறலாம் என்ற டெல்லி ஆஃபர் கதவைத் தட்டுகிறது. இந்த இருவேறு திசையிலான அரசியல் அழுத்தங்களால், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாமல் ஜி.கே.வாசன் தீவிரக் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.