பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், மருத்துவர் ராமதாசுடன் தீய சக்திகள், துரோகிகள், கைக்கூலிகள் இருக்கும் வரை அவர் உடன் சேரமாட்டேன் என்று தெரிவித்த நிலையில், அந்தப் பட்டியல் கொடுத்தால் நானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்று பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாமகவை சேர்ந்தவர்களே பாமகவினரை வீச்சருவாள், இரும்பு ராடு மற்றும் கற்கள் போன்றவற்றால் கொடூரமாக தாக்கியுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் அன்று காரில் இருந்து இறங்கி இருந்தால் அங்கேயே அவர் காலியாகி இருப்பார். பல இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது எவ்வளவு அவமானகரமான வேதனையான செயல்.
தாக்குதலில் காயமடைந்துள்ள நடராஜ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசம் அடையும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும் மருத்துவர் ராமதாசுடன் தீய சக்திகள், துரோகிகள் மற்றும் கைக்கூலிகள் இருக்கும் வரை தந்தையுடன் சேர மாட்டேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். கொலை முயற்சி நடப்பதாக அவர் கூறியிருக்கிறார். அந்த தீய சக்திகள் யார் யார் என்று பட்டியல் கொடுத்தால் அதில் நானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் விலகிக் கொள்ள தயாராக இருக்கிறோம். அதன் பிறகாவது மருத்துவர் ராமதாசும் அன்புமணியும் சந்தித்து பாமக வலுப்படுத்தட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பியுள்ளார்.
