மருத்துவமனையை பெண்கள் கல்லூரியாக மாற்றிய மைக் மோகன்? கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்துப் போட்டவராச்சே!

By Arun

Published on:

1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்கள் போட்டிப்போட்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்க, தனக்கென தனி ரூட் போட்டு இளம்பெண்களின் மனதை கொள்ளைக்கொண்டவர்தான் மோகன். இவரை மைக் மோகன் என்றும் அழைப்பார்கள்.

1977 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த “கோகிலா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மோகன். அதனை தொடர்ந்து “அபரிச்சிதா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்த மோகன், “மடாலாசா” என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்தார். அதனை தொடர்ந்துதான் தமிழில் “மூடுபனி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

அதன் பின் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த மைக் மோகன் அன்றைய இளம்பெண்களின் கனவுக்கண்ணானாக திகழ்ந்தார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் மோகனை குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

அதாவது ஒரு முறை மோகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்களாம். அப்போது சித்ரா லட்சுமணன் அவரை நலம் விசாரிப்பதற்காக சென்றாராம். அப்போது அந்த மருத்துவமனையின் வளாகத்தில் பல பெண்கள் கூடியிருந்தனராம். அனைத்து பெண்களும் மோகனின் நலம் விசாரிக்க வந்தவர்களாம். ஒரு பெண்கள் கல்லூரி போலவே அந்த மருத்துவமனை அன்றைக்கு இருந்ததாக சித்ரா லட்சுமணன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.