இதெல்லாம் காதலா..? காதலனை தரையில் எச்சில் துப்பி நக்க வைத்த காதலி… மண்டியிட வைத்து நடத்திய கொடூரத் தாக்குதல்… வைரலாகும் பகீர் வீடியோ..!

By Soundarya on பங்குனி 6, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவில், காதலி என்ற பெயரில் ஒரு பெண் தனது காதலனை மிகக் கேவலமான முறையில் நடத்துகிறார். தரையில் எச்சில் துப்பி, அதனை அந்த இளைஞரை நக்கச் சொல்லி வற்புறுத்துவதோடு, அவர் அதனைச் செய்த பிறகும் அவரை சரமாரியாகத் தாக்குகிறார். ஒரு மனிதனின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் முற்றிலுமாகச் சிதைக்கும் இந்த அருவருக்கத்தக்கச் செயல், காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

காதல் என்ற போர்வையில் அரங்கேறும் இத்தகைய வன்முறைகளும், அதிகாரத் தோரணைகளும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். ஒருவரை அடிமையைப் போலச் சிறுமைப்படுத்தி, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க அரங்கேற்றப்படும் இந்தச் செயல் காதலே அல்ல, அது ஒரு விகாரமான மனநோய் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த வீடியோவில் உள்ள பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இணையத்தில் வலுத்து வருகிறது.