கர்நாடகாவில் காதலன் திருமணத்தை தள்ளிப் போட்டதால் காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த லதா என்ற பெண்ணும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டருக்கும் தெரிய வர பேசி முடித்து பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் விரைவிலேயே தன்னுடைய காதலனை கரம்பிடிக்கலாம் என்று லதா மிகப்பெரிய கனவுடன் இருந்துள்ளார். ஆனால் அவருடைய காதலன் ரஞ்சித்தின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் லதா உடனான திருமணத்தையும் தள்ளி போட்டுள்ளார்.
இது லதாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காதலியிடம் கேட்டபோது இருவரிடமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த லதா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருடைய சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
