“கல்யாணம் பண்ணி வைக்க மாட்டீங்க…என்னை தேடாதீங்க…” நோட்டில் கடிதம் எழுதி வைத்து மாயமான சிறுமி… 2 நாட்கள் கழித்து அம்பலமான உண்மை…. அண்ணனின் பரபரப்பு புகார்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கஜனி பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மதியம் வீட்டிலிருந்து திடீரென மாயமானார். குடும்பத்தினர் இரண்டு நாட்களாகப் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதையடுத்து சிறுமியின் பள்ளிப் பையைச் சோதித்துப் பார்த்தபோது, அவரது நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த உருக்கமான கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், “என்னைத் தேட வேண்டாம், நான் என் காதலனுடன் செல்கிறேன். நீங்கள் எனக்கு அவனுடன் திருமணம் செய்து வைக்க மாட்டீர்கள் எனத் தெரியும். நாங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்தால் எங்களைத் தேடாதீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

   

அந்த கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது தங்கையை ஆசை வார்த்தைகள் கூறித் தன் வசப்படுத்தி கடத்திச் சென்றுவிட்டதாகச் சிறுமியின் அண்ணன் கஜனி காவல் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியையும் அந்த வாலிபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.