“ஐயோ என் புள்ள போச்சே”…. பள்ளியில் திடீரென அலறிய 8 வயது சிறுமி… அடுத்த நொடியே பிணமாக மீட்கப்பட்ட சோகம்…. அதிர வைக்கும் உண்மை..!

Spread the love

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் – தனலட்சுமி தம்பதியின் 8 வயது மகள் ரக்‌ஷிதா. இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழாவிற்கான நடன ஒத்திகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ரக்‌ஷிதா நடனமாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவரது தலையில் விஷப்பூச்சி ஒன்று விழுந்து கடித்ததாகக் கூறப்படுகிறது.

பூச்சி கடித்த வேகத்தில் சிறுமி ரக்‌ஷிதா திடீரென மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்களும் அங்கிருந்தவர்களும், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு ரக்‌ஷிதாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உயிரிழந்தது தொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஒத்திகையின் போது உடனிருந்தவர்களிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளி வளாகத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த அசம்பாவிதம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சமீபகாலமாக பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் பெற்றோர்களிடையே அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வகுப்பறையில் புத்தகப் பையில் இருந்த பாம்பு கடித்து மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அந்தத் துயரம் மறைவதற்குள், தற்போது நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து பள்ளி சிறுமி உயிரிழந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகங்களை முறையாகப் பராமரிக்கவும், புதர்களை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

5 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

6 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

6 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

6 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

6 மணத்தியாலங்கள் ago