உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா…. தமிழக அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகை…. எப்படி விண்ணப்பிப்பது…?

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை, வீர செயல்களை புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருதை வழங்குகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு அறிவிப்பின்படி, விருதை பெற தகுதியுடைய குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்

   
  • விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
  • 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
  • விண்ணப்பிப்பவர்கள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடுதல், பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்ற வீர செயல்களில் ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.
  • ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் மூலம் சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை தீர்வு காண விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும்
  • ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்று கருதப்படும் துறைகளில் சாதனை புரிந்தவராக  இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள் : நவம்பர் 29, 2025

   

விண்ணப்பிக்கும் முறை :

 

 https://awards.tn.gov.in  என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தின் இரண்டு நகல்களை பூர்த்தி செய்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  • சுயவிவரம்
  • சுய சரிதை
  • இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • வீர செயல்கள் பற்றிய குறிப்பு, அதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் தொகுப்பு.
  • மேலும் ஏதேனும் தேசிய அல்லது உலகளாவிய விருதுகள் பெற்று இருந்தால் அதன் சான்றுகளை இத்துடன் இணைக்க வேண்டும்.

மேலும் தொடர்புக்கு 04652-278404 என்ற தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்.