திடீரென கேட்ட சங்கிலிக்கருப்பு சத்தம், ஜன்னல் வழியே தெரிந்த உருவம்… வீட்டுக்குள் தனியாக இருந்த 15 வயது சிறுமி.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சங்கிலிக்கருப்பு என்ற 24 வயது வாலிபர் அருகே உள்ள வீட்டில் 15 வயது சிறுமி ஒருவர் தனியாக இருப்பதை அறிந்துள்ளார். உடனே அங்கு சென்ற அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அதனால் பயந்து போன அந்த சிறுமி வீட்டு கதவை பூட்டிக் கொண்டார். பிறகு ஜன்னல் வழியாக அந்த சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கதவு மீது கல் எரிந்து சங்கிலி கருப்பு சத்தம் போட்டதாக தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து போன அந்த சிறுமி வீட்டுக்குள் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். சிறுமியின் கழுத்தில் தூக்கு போட்டதற்கான காயம் இருந்த நிலையில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்த நிலையில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.