தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மயிலார் தேவ் பள்ளி பகுதியில் பீகாரை சேர்ந்த நவ்ஷாத் (45) என்ற நபர் வசித்து வருகின்றார். இவருக்கு காத்தூன்(38) என்ற மனைவியும் ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்களும் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்று உழைத்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றி வந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் வளர வளர நாளுக்கு நாள் குடும்ப செலவும் கூடுதலாகி கொண்டே வந்துள்ளது. இதனால் வருத்தப்பட்ட நவ்ஷாத் அடிக்கடி தன் மனைவியிடம் புலம்பியுள்ளார்.
அவரும் தன் கணவருக்கு பல ஆறுதல்கள் கூறியுள்ளார். இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே மன அழுத்ததில் இருந்த நௌஷாத் சம்பவத்தன்று நன்றாக குடித்துவிட்டு தன்னுடைய வீட்டின் கதவை உட்புறமாக பூட்டி கொண்டார். அதன் பிறகு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அவருடைய மனைவியும் எட்டு குழந்தைகளும் கதறி அழுதனர். உடனே தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப செலவுகளை தாங்க முடியாமல் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
