Connect with us

CINEMA

‘கில்லி’ பட அரிசி மூட்டையா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா…? லேட்டஸ்ட் போட்டோஸ்…

விஜய் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படங்களில் ஓன்று கில்லி. நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படம், மிகப்பெரிய திருப்பு முனை என்றால் அது கில்லி திரைப்படம் தான்.

   

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது கில்லி திரைப்படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

வில்லன் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் மிரட்டியிருந்தார். படத்தில் பிரகாஷ்ராஜ் பேசிய வசனங்கள் இன்றுவரை பிரபலம். மேலும் படத்தில் விஜய்க்கு தங்கையாக புவனா என்ற கதாபாத்திரத்தில் ஜெனிபர் நடித்திருந்தார்.

விஜய், ஜெனிஃபர் இருவரும் சேர்ந்து படத்தில் செய்யும் கலாட்டா படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்றே கூறலாம்.

படத்தில் சிறுமியாக தோற்றமளித்த ஜெனிஃபர் தற்போது நன்கு வளர்ந்து படங்களில் நாயகியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.

அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘கில்லி பட அரிசி மூட்டையா இது..?’ என்று கேள்வி  எழுப்பி வருகின்றனர்.

Continue Reading

More in CINEMA

To Top