நெஞ்சை பதறவைக்கும் அமேசான் பயங்கரம்: மீன்பிடி வலையில் சிக்கிய ராட்சத அனகோண்டா – நெட்டிசென்களை மிரளவைக்கும் வீடியோ…!

By Swetha on ஆனி 21, 2026

Spread the love

அமேசான் காட்டுப் பகுதியில் ஒரு மீனவர் வீசிய மீன்பிடி வலையில், மீன்களுக்குப் பதிலாக ஒரு ராட்சத அனகோண்டா பாம்பு சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. அமேசான் நதிப் பகுதியில் படகில் சென்றபடி அந்த மீனவர் அனகோண்டா பாம்பை கையில் பிடித்திருக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைக்கின்றன. மனிதர்களை எளிதில் விழுங்கும் அளவுக்குப் பிரம்மாண்டமாக இருக்கும் அந்தப் பாம்பைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பையும் பயத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ ‘pontodevistaabr’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வலையில் சிக்கிய அந்த ராட்சத அனகோண்டா ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அதன் காரணமாகவே மீனவரால் எவ்வித பயமும் இன்றி அதன் உடலையும் வாலையும் கையில் பிடித்து வீடியோ எடுக்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பாம்பு இறந்துவிட்ட நிலையிலும் அதன் அச்சுறுத்தும் தோற்றம் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.

   

https://www.instagram.com/reel/DZh4-awu_UT/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

   

இந்த வைரல் வீடியோவிற்கு சமூக வலைத்தள பயனர்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “பாம்பு இறந்துவிட்டதால்தான் மீனவர் தப்பினார், அதுவே உயிரோடு இருந்திருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்” என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். பலவீனமான இதயம் கொண்டவர்கள் இந்த வீடியோவைப் பார்த்தால் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்ற லெவலுக்கு இந்த அமேசான் அனகோண்டா வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.