BIG ALERT: ஆதார் கார்டு இருந்தால் குறைந்த வட்டியில் லோன் கிடைக்குமா?.. மத்திய அரசின் எச்சரிக்கை அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 7, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பயன்படுத்தப்படும் ஆதார் கார்டு மூலமாக பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஆதார் கார்டு என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக இருப்பதால் அனைவரும் இதனை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி தற்போது பிரதமர் திட்டத்தின் கீழ் ஆதார் கார்டு வைத்திருந்தால் இரண்டு சதவீதம் ஆண்டு வட்டியில் லோன் வழங்கப்படும் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மை அல்ல என்றோம் இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் PIB Fact Check அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி செய்தியை ஷேர் செய்ய வேண்டாம் என்றும் இதனை வைத்து நமது தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும் PIB தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இனி யாராவது ஆதார் கார்டு இருந்தால் லோன் கிடைக்கும் என்று கூறினால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.