கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான கஸ்தூரி சங்கர், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) கூட்டணி அரசுக்கு மக்கள் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புதிய அமைச்சரவையில் அதிகாரிகள் மாற்றம், புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் வருகை போன்ற நிர்வாக மாற்றங்கள் இயல்பானவை என்றும், அவர்கள் இந்த புதிய நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி வருவது த.வெ.க அரசின் ஒரு நல்ல தொடக்கத்தைக் காட்டுவதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
தி.மு.க தரப்பில் இருந்து விஜய் அரசுக்கு வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய கஸ்தூரி, “தி.மு.க விமர்சிக்கிறது என்றால், விஜய் நல்ல முறையில் ஆட்சி நடத்துகிறார் என்றுதான் அர்த்தம்” எனக் குறிப்பிட்டார். மேலும், தி.மு.கவின் உதயநிதி ஸ்டாலின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதுபோன்று கத்திக்கொண்டுதான் இருக்கப் போகிறார் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் விமர்சித்தார். த.வெ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்த புதிய அரசுக்கு மக்கள் தங்களின் ஆதரவை வழங்கி பொறுத்திருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக அமைந்தது.
