என்னதான் ஆச்சு கவினுக்கு..? திருமணத்திற்கு முன்பு இருந்த அந்த விஷயம்.. அதுக்கு அப்பறமா அதை பாக்கவே முடிலயே..

By admin on தை 5, 2024

Spread the love

நடிகர் கவின் டாடா, லிப்ட் போன்ற படங்களில் நடித்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தவிர விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இலங்கை பெண் லாஸ்லியாவை கவின் காதலித்தது பெரிய வைரலாக இருந்தது. எப்போதும் நண்பர்கள் சூழ ஜாலியாக இருந்தவர்தான் கவின். அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான், இந்தமுறை பிக்பாஸ் சீசன் 7ல் இருந்து ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி. கவின் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, அங்கு அவரை பார்க்க வந்த பிரதீப் ஆண்டனியை, ஓங்கி அறைந்து பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

   

இப்போது ஸ்டார் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் கவினுக்கு, தொடர்ந்த படவாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. இதில் நல்ல கதைகளை, கேரக்டர்களை தேர்வு செய்து கவின் நடிக்கிறார். முதலில் லட்சங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நடிகர் கவின், இப்போது சில கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் முன்னேறி இருக்கிறார்.

   

 

இந்நிலையில், சமீபத்தில்தான் கவினுக்கு திருமணம் நடந்தது. அவரை இப்போது திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என இரண்டாக வேறுபடுத்தி பார்க்கும் அளவுக்கு அவரது நடவடிக்கை மாறியிருக்கிறது. எப்போதும் கலகலப்பாக பேசியபடி, சிரித்தபடி ஜாலியாக இருக்கும் கவின் இப்போது அப்படியே எதிர்மறையாக மாறி இருக்கிறார். யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக மட்டுமே இருக்கிறார். நண்பர்களை விட்டே விலகி இருக்கிறார்.

தனது கால்ஷீட், சம்பள விவகாரங்களை கூட கவனித்துக்கொள்ள தனது மனைவியின் சகோதரர், மச்சினனை நியமித்திருக்கிறார். அட, இது கவின்தானா என பார்க்கும் பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு, திருமணத்துக்கு பின் அமைதியின் சொரூபமாக கவின் மாறியது ஏன் என்று பலரும் குழம்பி வருகி்னறனர்.