தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் துருவ நட்சத்திரம்.. நாலு பக்கமும் லாக் ஆகி கிடைக்கும் GVM.. இதுக்கு இல்லையா Sir ஒரு எண்டு..

By Ranjith Kumar

Updated on:

கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் விக்ரம் அவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் தான் துருவ நட்சத்திரம், அப்படம் நீண்ட வருட காலங்களாகவே உருவாக்கப்பட்டு கொண்டுதான் உள்ளது, இப்பொழுது வரும் அப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், எப்பொழுதுதான் வரும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள், அந்தப் படத்தின் சர்ச்சை நீங்கவும் இல்லை, அந்தப் படத்தின் கடனின் பிரச்சனையும் நீங்கவும் இல்லை, எப்பொழுது அந்த படத்தையும் பிரச்சனையை அனைத்தும் தீர்ந்து, அந்த படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்து வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   

இப்படித்தான் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கினார். அப்படம் நீண்ட நாட்களாகவே தோட்டா எப்பொழுது வரும் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து கடைசியில் என்னை நோக்கி பாயும் தோட்டா ஒரு வழியாக வந்துவிட்டது, ஆனால் வந்த பின் தான் தெரிந்தது எதற்காக இந்த தோட்டா வந்தது என்று மக்கள் அனைவரும், சரமாரியாக படத்தன் மேல் விமர்சனத்தை அளித்து அள்ளித் தெளித்தார்கள். அப்படம் போல் இந்த படமும் ஆகிவிடு கூடுமோ என்று ரசிகர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

கௌதம் வாசுதேவன் மேனன் அவர்கள் வரும் பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீசாக போகிறது என்று அறிவித்திருந்தார். அதை அதை நம்பி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள விநியோகஸ்தர்கள் அனைவரும் இப்படத்தை முழுத் தொகையும் கொடுத்து வாங்கியுள்ளார்கள். இப்படம் மீண்டும் தள்ளிப் போனதை கண்டு அவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள், இயக்குனர் கௌதம் மேனன் மேல் கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வருகிறார்கள். நீங்க சொன்னதை நம்பி தான் வட்டிக்கு கடன் வாங்கி படத்தை வாங்கினோம் இப்பொழுது மீண்டும் எங்கள் படத்தை தள்ளி வைத்திருக்கிறீர்கள்? எப்பொழுதுதான் இப்படம் வரும் என்று தெளிவாக ஒரு தேதியை சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்கள் அனைவரும் இவர் மேல் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
இப்பொழுது கௌதம் வாசுதேவன் மேனன், இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இப்படம் வெளியாகும் நாளுக்காக.

author avatar
Ranjith Kumar