தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும்தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கவும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக இபிஎஸ் அதிமுக கூட்டணியில் விஜய் கட்சி இணைய உள்ளதை சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டதாக சூசகமாக தெரிவித்து இருந்தார். இருந்தாலும் கூட்டணி குறித்து அறிவிப்பை இதுவரை விஜய் வெளியிடாமல் உள்ளார். இப்படியான நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என்று நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…