அதிமுகவின் ‘அடுத்த ஜெயா’… திமுக கோட்டையில் அதிரடியாக களமிறங்கும் கௌதமி…. இபிஎஸ் போடும் மாஸ்டர் பிளான்…!

By Nanthini on தை 12, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரபல நடிகை கௌதமி அதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் நேர்காணலில் கௌதமி கலந்து கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினரிடம் அவர் தனது விருப்ப மனுவை சமர்ப்பித்து, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினார்.

குறிப்பாக, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கௌதமி மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிகிறது. ராஜபாளையம் தொகுதியில் தனக்குள்ள செல்வாக்கு மற்றும் அங்குள்ள மக்களின் தேவைகள் குறித்து நேர்காணலின் போது அவர் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் நீண்ட காலம் பணியாற்றிய கௌதமி, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு இம்முறை முக்கியத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

   

நேர்காணலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கௌதமி, “அதிமுக ஒரு வலிமையான இயக்கம் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும்” புகழாரம் சூட்டினார். மக்கள் பணியாற்றுவதற்கு அதிமுக தகுந்த மேடை எனக் குறிப்பிட்ட அவர், தலைமை எந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் அங்கு வெற்றி பெறக் கடுமையாக உழைப்பேன் எனத் தெரிவித்தார். கௌதமியின் இந்த அரசியல் நகர்வு ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.