“கம்பீர் ஹே ஹே”… கம்பீரை கலாய்த்த ரசிகர்கள்… ஒரு நொடி விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ….!

By Nanthini on தை 20, 2026

Spread the love

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க கடைசி போட்டி இந்தூரில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை நியூசிலாந்திடம் இழந்திருந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரையும் இழந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்திய அணியின் இந்த மோசமான தோல்வியால் ஆத்திரமடைந்த மைதானத்தில் இருந்த ரசிகர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறிப்பாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை குறிவைத்து, “கவுதம் கம்பீர் ஹே ஹே” (Gautam Gambhir Haaye Haaye) என கோஷங்களை எழுப்பினர். மைதானமே அதிரும் வகையில் கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக இந்திய அணி சந்தித்து வரும் தொடர் தோல்விகளே ரசிகர்களின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

   

ரசிகர்கள் இத்தகைய முழக்கங்களை எழுப்பியபோது, மைதானத்தில் இருந்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். பயிற்சியாளருக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிடுவதைக் கேட்டு கோலி வியப்புடன் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அணியின் தோல்வி மற்றும் பயிற்சியாளர் மீதான ரசிகர்களின் அதிருப்தி ஆகியவை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.