மதுரை எல்.ஐ.சி. பெண் மேலாளர் மரணத்தில் பகீர் திருப்பம்… “புகார் அளிப்பேன் எனச் சொன்னதால் ஆத்திரம்” சிக்கிய எல்ஐசி அதிகாரி…!!

By Soundarya on தை 20, 2026

Spread the love
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி தீயில் கருகி உயிரிழந்த சம்பவத்தில், அவருடன் பணியாற்றிய உதவி மேலாளரே பெட்ரோல் ஊற்றி அவரைக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டமிட்ட கொலை தொடர்பாக உதவி மேலாளர் ராம் என்பவரைத் திலகர் திடல் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த கல்யாணி தீயில் முழுமையாகக் கருகிய நிலையில், கொலையாளி ராம் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்; மேலும் காயமடைந்த மற்றொரு அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலைக்கான பின்னணி குறித்துப் போலீசார் நடத்திய விசாரணையில், பாலிசிதாரர்களின் இறப்பு உரிமக் கோரல் தொகையை வழங்குவதில் ராம் காலதாமதம் செய்ததாகத் தெரிகிறது. இது குறித்துக் காப்பீட்டு முகவர்கள் கல்யாணியிடம் புகார் அளித்த நிலையில், அவர் ராமை எச்சரித்ததோடு உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம், கல்யாணி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது அம்பலமாகியுள்ளது.