அதிர்ச்சி..! கத்தாரில் திடீரென வெடித்துச் சிதறிய எரிவாயு ஆலை.. 54 தொழிலாளர்கள் கருகிய நிலை.. 18 பேர் மாயம்..!!

By Soundarya on ஆனி 22, 2026

Spread the love

கத்தாரின் ராஸ் லபான் நகரில் அமைந்துள்ள பர்சான் எரிவாயு விநியோக ஆலையில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 54 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் 18 பேர் மாயமாகியுள்ளனர். உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்காகப் பொறியாளர்கள் ஆலையைத் திறக்க முயன்ற போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடிவிபத்தின் தாக்கத்தால் ஆலை அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிப் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் சிக்கி கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 54 தொழிலாளர்களும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கத்தார் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ஆலைக்குள் சிக்கி மாயமான 18 தொழிலாளர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஆலையின் இடிபாடுகளுக்கு இடையே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

   

அண்மையில் நடந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களால் இந்த ஆலை கடுமையாகச் சேதமடைந்து, பல வாரங்களாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும் வெடிவிபத்து ஏற்பட்ட போதிலும், ஆலை வளாகத்தில் நச்சு வாயுக்கசிவு எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த விபத்து சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.