பிதாமகன் படத்தில், கஞ்சா கொடுக்கி என்று ஒரு காட்சியில் கஞ்சா கருப்புவை லைலா அழைப்பார். அதுவே அவரே நிரந்தர பெயராகி விட்டது. அடுத்து கஞ்சா கருப்புவுக்கு நல்ல அடையாளத்தை வந்த படங்கள் பருத்திவீரனும், ராம் படமும்தான். பருத்திவீரன் படத்தில், டக்ளஸ் கேரக்டரில் கஞ்சா கருப்பு நடிப்பு மிக பிரமாதமாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரானார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால், சமீபத்திய படங்களில் கஞ்சா கருப்புவை காண முடியவில்லை.
இந்நிலையில், பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து குறித்து இன்று அளித்த ஒரு நேர்காணலில் கஞ்சா கருப்பு கூறியதாவது, பருத்திவீரன் படம்தான் கார்த்திக்கு முக்கிய அடையாளமாக அமைந்தது. இன்றுவரை அவர் எந்த காலேஜூக்கு, பங்ஷனுக்கு போனாலும் என்ன மாமா சவுக்கியமா, சித்தப்பு என்று பருத்திவீரன் பட டயலாக்கைதான் பேசுகிறார். இந்த டயலாக்கும், பாடி லாங்குவேஜூம் யார் கார்த்திக்கு கற்றுக் கொடுத்தது? எத்தனை படத்தில் கார்த்தி நடித்தாலும், அது பருத்தி வீரன் போன்ற ஒரு படத்துக்கு இணையாகாது. இந்த பிரச்னை ஆரம்பித்த போது, சிவக்குமார் ஞானவேல்ராஜாவையும், அமீரையும் கூப்பிட்டு பேசி இருக்க வேண்டும். அமீருக்கு தர வேண்டிய பணத்தை தந்திருக்க வேண்டும். ஏன் அவர் அப்படி செய்யவில்லை. செய்திருந்தால் எப்போதோ பிரச்னை முடிந்திருக்கும்.
சூர்யாவையும், கார்த்தியையும் உருவாக்கியது டைரக்டர் பாலாவும், அமீரும்தான். அதை எப்போதும் அவர்கள் மறந்து விடக்கூடாது. ஞானவேல் ராஜா, அமீரை பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாதவர். அமீர் மனம் புண்படும்படி அவர் பேசியிருக்கிறார். அது மிகவும் தவறு. எம்ஜிஆர், ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள், தங்களது இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை குருவாக மதித்தனர். ரஜினிகாந்த், பாலசந்தருக்கு முன் கைகட்டிதான் நிற்பார். அமீரை கார்த்தி, பூஜை ரூமில் வைத்து சாமி கும்பிட வேண்டாம்.
ஆனால் ஒரு குருவுக்கு உண்டான மரியாதையை தர வேண்டும். இப்போது கார்த்தி மிகப்பெரிய நடிகராகி இப்போது எவ்வளவு கோடிகளில் சம்பளம் வாங்க யார் காரணம் என்பதை மறந்துவிட்டார், என்று கடுமையாக பேசி இருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. மேலும் அவரை சாமியாக நினைத்து உன்னை அறிமுகம் செய்தவரை கும்பிட வேண்டும் என்று நடிகர் கஞ்சா கருப்பு அந்த நேரலையில் பேசி இருந்தார்..
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…