பகீர்.. திருச்சியில் பயங்கரம்..! மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை… ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி உயிருடன் எரித்துக் கொன்ற கும்பல்..! திடுக்கிடும் உண்மைகள்…!!

Spread the love

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்ட எரிக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த எலும்புக்கூடு அப்பகுதியில் காணாமல் போன வினோத்குமார் என்ற இளைஞருடையது என்பது உறுதி செய்யப்பட்டது. மனநல பாதிப்புடைய வினோத்குமார், அப்பகுதியில் உள்ள கோவில் அருகே யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். அவர் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று வினோத்குமாருடன் மது அருந்திய வாலிபர்கள், அவரை வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்த முயன்றுள்ளனர். இதற்கு வினோத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் அவர் மயக்கமடைந்த நிலையில், ஆதாரங்களை மறைப்பதற்காக அவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், ஸ்ரீதர், ராஜ்குமார், கருணாகரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் என 6 பேரை போலீசார் அடையாளம் கண்டனர். அவர்களில் 5 பேரை கைது செய்த போலீசார், நான்கு பேரை சிறையிலும், ஒரு சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

15 minutes ago

3,000 கி.மீ தூரம்… சீனாவில் இருந்து ஹைதராபாத்தில் ஆபரேஷன்..! இந்தியாவின் முதல் 5G ரோபோடிக் செய்த பிரம்மாண்ட மருத்துவம்.. வியக்க வைக்கும் சாதனை…!

சீனாவின் வூகான் நகரில் இருந்தபடி, இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள நோயாளி ஒருவருக்கு 5ஜி தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் உதவியுடன் வெற்றிகரமாக…

17 minutes ago

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… ஈரானுடன் போர் நிறுத்தம்..? டெல்லியில் இருந்து உலகிற்கு.. இன்னும் சில மணி நேரத்தில் சொன்ன அமெரிக்கா நல்ல செய்தி…!!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன்…

34 minutes ago

மனைவி மறைவுக்குப் பிறகு… உருக்கமான வீடியோ வெளியிட்ட நடிகர் முத்துக்காளை… கலங்கிப்போன ரசிகர்கள்…!

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு சமீபத்தில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று…

37 minutes ago

பெற்ற மகளின் கண்முன்னே கள்ளக்காதலனுடன் தனிமை!.. மகளுக்கு வலைவீசிய ‘சைக்கோ’ மாமா.. நெஞ்சை உலுக்கும் சிறுமியின் வாக்குமூலம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்துராமன் என்பவரின் மனைவி மீனா (42). இந்த…

38 minutes ago

“வெறும் 20 அடிதானே” 7 வயது சிறுவனை அடித்து கை, அந்தரங்க உறுப்பை உடைத்த கொடூர முதல்வர்… பெற்றோர்களிடம் சொன்ன அலட்சிய பதில்..!!

ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்தகா மாவட்டத்தில் உள்ள சேன்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முர்கிதோலர் கிராமத்தில் இயங்கி வரும் 'டாக்டர் பீம்…

53 minutes ago