அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற ரவுடி ஷீட்டர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அலி நகரைச் சேர்ந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலையில் நடந்த இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த மயிலார்தேவ்பள்ளி போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக உடலை உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இக்கொலைச் சம்பவம் பழைய முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர வலைவீசி தேடி வருகின்றனர்.