வாடகைக்கு வீடு எடுப்போர் உஷார்..! 7 கோடி மோசடி செய்த கும்பல்… விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்..!

By Soundarya on புரட்டாதி 18, 2025

Spread the love

சென்னை சேலையூர் பகுதியில் நிதன்யா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக தங்கதுரை, இவருடைய மனைவி பூர்ணிமா, மேலாளர்களாக நளினி, மலர் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளார்கள். இவர்கள் வாடகைக்கு மற்றும் குத்தகைக்கு வீடு எடுத்து தருவதாக விளம்பரம் கொடுத்து அந்த தொழிலில் செய்து வந்துள்ளார்கள். தங்களிடம்குத்தகைக்கு வீடு எடுத்து தருவதாக ஒப்பந்தம் கேட்டு வருவோரிடம் அதற்குரிய பணத்தை வசூல் செய்துள்ளார்கள். ஆனால் வீட்டு உரிமையாளர்களிடம் மாத வாடகை ஒப்பந்தம் போட்டு அதற்கான கமிஷன் தொகையை பெற்றுள்ளார்கள்.

இதனையடுத்து தங்கள் வீட்டில் குடியேறியவர்கள் வாடை தராததால் பிரச்சினை எழுந்துள்ளது. இது குறித்து வீட்டு உரிமையாளர்களும், வாடகைதாரர்களும் போலீசில் புகார் அளித்துள்ளார்கள். இது குறித்து விசாரணையில் இவர்கள் மிகப்பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தங்கதுரை  உள்ளிட்டோர் ஏழு கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் கைதான இயக்குனர் பூர்ணிமாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.