100 கோடி கிளப்பில் இணைந்த கேம் சேஞ்சர்… மூன்று நாளில் இத்தனை கோடி வசூலா..?

By Soundarya on தை 13, 2025

Spread the love

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். தமானிசையமைத்த இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழு தெரிவித்திருந்தது.

   

சங்கரின் முந்தைய திரைப்படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியாக மாறியது. இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாற்றுமா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் நேற்று ரிலீசான நிலையில் படத்திற்கு இரு வேறு கருத்துக்கள் பெரும்பான்மையான ரசிகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

   

 

படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். படத்தின் கதையை பொருத்தவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதைக்களமாக அமைந்துள்ளது.

முதல் பாதையை ரசிகர்களுக்கு போர் அடிக்கும் விதமாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று சுவாரஸ்யமாக தான் உள்ளது. படத்தில் ராம்சரண் நடித்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படம் வெளியான மூன்றாம் நாளில் உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ.89.6 கோடியை வசூலித்துள்ளது.