Family முக்கியம் தான்… ஆனா இங்கே அதுக்காகவா வந்துருக்கீங்க…? கிரிக்கெட் தான் முக்கியம்.. கடுமையாக சாடிய கம்பீர்..!!

By Soundarya on ஆடி 12, 2025

Spread the love

இந்திய அணி நிர்வாகம் ஆனது சமீபத்தில் வெளிநாட்டு தொடர்களுக்கு அணி வீரர்கள் குடும்பத்தினர் வரக்கூடாது என்று தடை விதித்திருந்தது. இதற்கிடையில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இது குறித்து பேசி சுரேஷ் ரெய்னா ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற காரணம் வெளிநாட்டு தொடர்களுக்கு குடும்பத்தினர் வரக்கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் போட்ட தடைதான் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து புஜாரா வும் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த கம்பீர், “குடும்பம் என்பது முக்கியமானது தான் .ஆனால் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன பெரிய பொறுப்பு இருக்கிறது. இது ஒன்றும் விடுமுறைக்கான நேரம் அல்ல. நாட்டுக்காக இங்கு வந்திருக்கிறீர்கள். நாட்டில் கோடிக்கணக்கான பேர் இந்திய கிரிக்கெட் அணி விளையாட வேண்டும் என்று நினைக்கும் போது அதிலிருந்து ஒரு சிலர்  மட்டும் தான் இந்த ட்ரெஸ்ஸிங் ரூமில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள்.

   

உங்களுடைய நாட்டுக்கு பெருமை சேர்க்க மிகப்பெரிய வாய்ப்பு.நான் குடும்பத்தினர் வெளிநாட்டு தொடருக்கு வரக்கூடாது என்று தடை எல்லாம் விதிக்கவில்லை. குடும்பங்கள் நிச்சயம் ஒரு வீரர்களுக்கு தேவையான ஒன்று. ஆனால் உங்களுடைய முக்கிய கவனம் நாட்டிற்கு  பெருமை சேர்க்க வேண்டும் . அந்த குறிக்கோளை ஏற்றுக்கொண்டு அதற்காக நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். மற்றவர்களுக்கு வேண்டுமானால் எது வேண்டுமானாலும் சரியாக இருக்கலாம். ஆனால் எனக்கு நம்முடைய குறிக்கோள் தான் மற்ற அனைத்தையும் விட முக்கியம்” என்று கூறியுள்ளார்.