நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாகச் சில சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சொற்ப ரன்களில் (டக் அவுட்) ஆட்டமிழந்த அவர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் அவர் மீதான விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து அணி பேருந்தில் வீரர்கள் மைதானத்திற்குச் சென்றபோது, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அபிஷேக் சர்மாவிடம் மிகவும் தீவிரமாகப் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பேருந்தில் ஓட்டுநருக்குப் பின்னால் அமர்ந்திருந்த கம்பீர், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி வரும் அபிஷேக் சர்மாவுக்கு பவர்பிளே ஓவர்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்தும், தவறுகளை எவ்வாறு திருத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆக்ரோஷமாகவும் அதே சமயம் அறிவுரை வழங்கும் விதமாகவும் பேசினார்.
பிப்ரவரி 26 அன்று சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள அடுத்த போட்டி இந்திய அணிக்கு ஒரு ‘வாழ்வா-சாவா’ போராட்டமாகும். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில், பயிற்சியாளர் கம்பீரின் இந்த நேரடித் தலையீடு அணியை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. கம்பீரின் ஆலோசனைகளை ஏற்று, அபிஷேக் சர்மா ஜிம்பாப்வேக்கு எதிரான முக்கியமான போட்டியில் தனது ஃபார்முக்குத் திரும்புவாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
Gautam Gambhir started coaching Abhishek Sharma right there on the team bus. But sir, please stop this show in front of the cameras. You should have learned from Rohit Sharma how to explain things to a player, how to build their confidence, and how to bring out their best… pic.twitter.com/MmBKCRqY6d
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) February 23, 2026
