ஜி வி பிரகாஷ் தன்னுடைய 17 ஆவது வயதிலேயே வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் வெயில் படத்துக்கு முன்பாகவே ஏ ஆர் ரஹ்மான் இசையில் சில பாடல்களை ஜி வி பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிக்கு புக்கு ரயிலே, குச்சி குச்சி ராக்கம்மா உள்ளிட்ட பாடல்களில் இடம்பெறும் சிறுவனின் குரல் அவருடையதுதான்.
வெயில் படத்தில் இடம்பெற்ற சில பாடல்களை எப்படி அவர் அவ்வளவு சின்ன வயதில் இசையமைத்திருப்பார் என ஆச்சர்யப்பட்டனர். அந்த படத்தில் இடம்பெற்ற ‘உருகுதே மருகுதே’, ‘வெயிலோடு உறவாடி’ போன்ற பாடல்கள் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியாலும் பாடல்கள் பெற்ற கவனத்தாலும் ஒரே படத்தில் முன்னணி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார். அதன் பின்னர் இப்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் நடிகராக 25 படங்களுக்கு மேல் நடிகராகவும் நடித்துள்ளார்.

இதற்கிடையில் அவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதற்கு முக்கியக் காரணம் அவர் தன்னுடைய காதல் மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ததுதான். அவர் பிரபல நடிகை திவ்யபாரதியை காதலிப்பதால்தான் சைந்தவியை விவாகரத்து செய்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை இருவருமே மறுத்துள்ளனர். ஜி வி பிரகாஷின் இந்த விவாகரத்து முடிவை திரும்பப் பெற வைக்க ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜி வி பிரகாஷ், தனக்கும் தன்னுடைய மாமா ரஹ்மானுக்கும் இடையிலான உறவு குறித்துப் பேசியுள்ளார். அதில் “நான் சின்னவயதில் எல்லாம் அவரை மாமா என்றுதான் அழைத்து வந்தேன். ஆனால் இடையில் நான் அவரிடம் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்பொது அவரை எல்லோரும் சார் சார் என்று அழைப்பதைப் பார்த்து நானும் அப்படியே அழைக்கத் தொடங்கினேன். இப்போதும் சார் என்றுதான் அழைத்து வருகிறேன். மாமா என்று கூப்பிட முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
