யூடியூப் பிரபலமும் நடிகருமான ஜி.பி.முத்துவுக்கும், அவரது சொந்த ஊரான பெருமாள்புரம் மக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாக முரண்பாடு நிலவி வருகிறது. தங்களது ஊரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோவிலைப் புதுப்பிக்கும் பணிகளைப் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் சூழலில், ஜி.பி.முத்து தனது யூடியூப் வருமானத்திற்காகக் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதாக ஊர்மக்கள் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். மேலும், சாதாரண வழிபாட்டை ‘மாந்திரீக பூஜை’ எனச் சித்தரித்ததாகவும், தட்டிக்கேட்டவர்களை ஆட்களை வைத்துத் தாக்கிவிட்டுத் தன் மீதே புகார் அளித்ததாகவும், ஊர்ப் பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்துப் பதிவிடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
https://www.instagram.com/reel/Db8fNSSyySC/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஊர்மக்களின் தொடர் புகார்களால் காவல்துறையினர் தன்னை அடுத்தடுத்து விசாரணைக்கு அழைத்துத் துன்புறுத்துவதாக ஜி.பி.முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், “அடிக்கடி நடக்கும் விசாரணையால் என் பிள்ளைகள் அழுது துடிப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை; எனவே என்னைக் காவல் நிலையத்திலேயே கொன்று விடுங்கள்” என அவர் கண்ணீர்மல்கப் பேசியுள்ளார். இந்த சூழலில் ஜிபி முத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.
