“பேசாம என்னை கொன்னுருங்க…” பிள்ளைகள் அழுவதை பார்க்க முடியல…. திடீரென வீடியோ வெளியிட்ட ஜி.பி முத்து… அவருக்கு என்னாச்சு…?

By Devi Ramu on ஆவணி 13, 2026

Spread the love

யூடியூப் மற்றும் திரைப்பட நடிகரான ஜி.பி.முத்துவுக்கும், அவரது சொந்த ஊரான பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்டகாலமாகப் மோதல் போக்க நிலவி வருகிறது. இந்நிலையில், ஊர்மக்கள் திரண்டு வந்து ஜி.பி.முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தங்களது ஊரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோவிலைப் புதுப்பிக்க ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து திருப்பணிகளைச் செய்து வரும் நிலையில், ஜி.பி.முத்து தனது யூடியூப் வருமானத்திற்காகக் கோவில் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டுவதாகப் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், கோவிலில் நடைபெற்ற சாதாரண வழிபாட்டை ‘மாந்திரீக பூஜை’ எனச் சமூக வலைதளங்களில் சித்தரித்து ஊரின் பெயரைக் கெடுத்ததுடன், அதைத் தட்டிக் கேட்டவர்களை ஆட்களை வைத்து அடித்துவிட்டுத் தன் மீது தாக்குதல் நடந்ததாகப் பொய்ப் புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, ஊர்ப் பெண்களை அவர்களின் அனுமதியின்றி அத்துமீறி வீடியோ எடுத்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதாகவும், அவர் மீது ஏற்கனவே 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஊர்மக்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

   

இந்த நிலையில் தன் மீது ஏகப்பட்ட புகார்கள் போடுவதாகவும் அடுத்தடுத்த விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்துவதாகவும் ஜி. பி முத்து வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பிள்ளைகள் அழுவதை தன்னால் பார்க்க முடியவில்லை. எனவே காவல் நிலையத்தில் வைத்து என்னை கொன்று விடுங்கள் என அவர் பேசும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ

   

https://www.instagram.com/reel/Db88QQBMUEV/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==