”நீ நல்லா ஹேன்ஸம்மா இருக்க… உனக்கு பாக்யராஜ் சான்ஸ் கொடுக்க மாட்டாரு”… சத்யராஜை விரட்டி விட்ட பிரபல இயக்குனர்!

By vinoth on ஆனி 5, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போதிருக்கும் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ஜி எம் குமார். இவர் வெயில், பாலாவின் அவன் இவன் மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பாலாவின் அவன் இவன் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்து ரசிகர்களை உருக வைத்திருப்பார்.

நடிகராக அறியப்பட்ட ஜி எம் குமார் ஒரு நடிகர் மட்டுமில்லை. அவர் ஒரு கதையாசிரியர் மற்றும் இயக்குனரும் ஆவார். காக்கிச்சட்டை படத்தை லிவிங்ஸ்டனோடு இணைந்து எழுதியவர் ஜி எம் குமார். பாக்யராஜின் கதை இலாகாவில் முக்கியப் புள்ளியாக இருந்த இவர் அவரின் வெற்றி படங்களில் பணியாற்றியவர்.

   

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தான் பாக்யராஜிடம் பணியாற்றிய போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் பாக்யராஜின் ஆஃபிஸ் வெளியே நின்று தம் அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது டார்லிங் டார்லிங் டார்லிங் படத்துக்கு சுமன் வேடத்துக்கு ஆள்தேடிக் கொண்டிருந்தோம். அது தெரிந்துதான் சத்யராஜ் ஒரு ஜாவா பைக்கில் வந்தார்.

   

என்னிடம் சார் ஏதோ ஒரு ரோலுக்கு ஆடிஷன் நடக்குதாமே எனக் கேட்டார். நான் அவரைப் பார்த்தேன். அப்போது சத்யராஜ் முடியெல்லாம் கொட்டாமல் ஹேண்ட்ஸம்மாக இருந்தார். அவரிடம் “நீ பாக்க நல்லா இருக்க. உனக்கு அவரு வேஷம் கொடுக்க மாட்டாரு” என உண்மையை சொல்லிவிட்டேன். அவரும் போய்விட்டார்.

 

சில ஆண்டுகள் கழித்து நான் அவரை வைத்து பிக்பாக்கெட் என்ற படத்தை எடுத்த போது இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருந்து என்னிடம் சொன்னார். நான் அவரிடம் “உண்மையைதான் சொன்னேன்” எனக் கூறினார். சத்யராஜ் ஒரு மிகச்சிறந்த நடிகர். எந்த தொல்லையும் கொடுக்காத நடிகர். அவரை வைத்து எவ்ளோ நேரம் வேணாலும் ஷூட் செய்யலாம். அவர் பாட்டுக்கு நடித்துக் கொண்டே இருப்பார்” எனக் கூறியுள்ளார்.