மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர் முக்தா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு தாமிரபரணி பானு என்று சொன்னால் தான் இவரை அடையாளம் தெரியும்.
அந்த அளவிற்கு தமிழில் முதல் படமான தாமிரபரணியில் அற்புதமாக நடித்திருப்பார். பிரபு, விஷால், நதியா உள்ளிட்டோர் நடித்த தாமிரபரணி படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்குப் பிறகு முக்தா சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் அவை வெற்றியை கொடுக்கவில்லை.
ஆனால் அவர் மலையாள திரை உலகில் பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். 2015 ஆம் ஆண்டு நடிகை முத்தா ரிங்கு டாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகர் சுரேஷ்கோபி மற்றும் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை முத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு அடடா தாமிரபரணி பானுவா இது என்று தான் தோன்றும்.