FLASH NEWS: விஜய்க்கு இன்று பதவிப்பிரமாணம் இல்லை… சென்னையில் உருவானது பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல் பரவியது. இதன் காரணமாக மெரினா கடற்கரைச் சாலையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதேபோன்ற தகவல்கள் சமூக வலைதளங்களிலும் (SM) வேகமாகப் பரவி வருவதால், போலீஸார் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தற்போது வரை விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.