காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

By Nanthini on ஆனி 23, 2026

Spread the love

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.5,932.23 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படவுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இத்திட்டத்தில் உள்ள கடன் வரம்பு நிபந்தனைகள் தங்களுக்குப் போதாது என்று தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்ததைப் போல, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள குறு, சிறு விவசாயிகளின் ஒட்டுமொத்த பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.