மது பிரியர்களுக்கு பேரதிர்ச்சி…. ஓல்ட் மாங்க், ராயல் சேலஞ்ச் பிராண்டுகளுக்கு திடீர் தடை – FSSAI அதிரடி….!

Spread the love

இந்தியாவில் பிரபல மதுபான பிராண்டுகளான ஓல்ட் மங்க், ராயல் சேலஞ்ச், ஆண்டிகுய்ட்டி ப்ளூ மற்றும் பேக்பைப்பர் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில தயாரிப்புகளை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாக நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய மதுபானத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எஃப்எஸ்எஸ்ஏஐ உத்தரவின்படி குறிப்பிட்ட உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்பட்ட சில மதுபானங்களின் விற்பனை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேசத்தில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் தயாரித்த ஆண்டிகுய்ட்டி ப்ளூ, ராயல் சேலஞ்ச் விஸ்கி மற்றும் இன்ப்ரூ பெவரேஜஸ் தயாரித்த பேக்பைப்பர் ராயல் விஸ்கி, ஓல்டு கேஸ்க் டிர்பிள் எக்ஸ் ரம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிராவில் மோகன் ராக்கி ஸ்பிரிங் வாட்டர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஓல்ட் மாங்க் பிராண்டின் மூன்று வகைகளும் இந்த தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தத் தடை குறிப்பிட்ட உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமா அல்லது நாடு முழுமைக்கும் பொருந்துமா என்பது குறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ இன்னும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

இந்திய உணவு பாதுகாப்பு விதிகளின்படி மதுபானங்களில் இயற்கையான சுவையூட்டிகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால், தடையை எதிர்கொண்டுள்ள தயாரிப்புகளில் ‘விஸ்கிக்கு விஸ்கி சுவை’, ‘ரம்முக்கு ரம் சுவை’ என செயற்கையான மற்றும் இயற்கை நிகர் (Nature-identical) சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது. கரும்புச் சர்க்கரை, மால்ட் மற்றும் திராட்சை போன்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் காய்ச்சி வடித்தல் மற்றும் முதிர்ச்சியடையச் செய்யும் வழக்கமான உற்பத்திச் செயல்முறைகளைத் தவிர்க்கவே உற்பத்தியாளர்கள் இத்தகைய குறுக்கு வழிகளைக் கையாள்வதாக எஃப்எஸ்எஸ்ஏஐ சுட்டிக்காட்டியுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய மதுபானச் சந்தையில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் போன்ற சர்வதேச அளவிலான நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான பிராண்டுகள் நடுத்தர மற்றும் குறைந்த விலைப் பிரிவைச் சேர்ந்தவை என்பதால், இவை நாடு முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில்தான் அதிக காஃபின் கொண்ட மதுபானங்களை ‘எனர்ஜி டிரிங்க்’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்த எஃப்எஸ்எஸ்ஏஐ, தற்போது மதுபான உற்பத்தியின் தரத்தை உறுதி செய்வதிலும் தனது கடுமையான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அய்யோ போச்சா… முதல் சந்திப்பில் ரூ 20,500 காலி… டேட்டிங் ஆப் காதலியின் அடுத்த மீட்டிங்கிற்கு பிளான்… தப்பிப்பாரா இளைஞர்?…

முதல் சந்திப்பிலேயே ரூ 20,500 கட்டணம் என்பது மிகவும் அதிகம், மேலும் இது சமீபத்தில் டேட்டிங் செயலிகளில் பலருக்கும் நடக்கும்…

7 minutes ago

இப்படி ஒரு விஷயமா?… சூரிய கிரகணம் 2026… சதுர்கிரகி யோகத்தால்… யாருக்கு பண மழை?… உங்கள் ராசியும் இதில் இருக்கா?…

2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆடி அமாவாசை அன்று நிகழவுள்ளது. இந்த முழு சூரிய…

24 minutes ago

“அடேய்… எழுதி வைத்துக் கொள்ளுங்கள்… அடுத்து இதுதான் நடக்கும்… இடைத்தேர்தலில் திரிஷா?… தவெக-வின் திரைக்கதையை அவிழ்த்த திமுக MP அப்துல்லா…!”

தஞ்சாவூர் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசாத விஷயங்களைத் திரித்து, வீடியோவை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று திமுக…

34 minutes ago

“அய்யோ என்னடா… திரிஷா என்ன பிரதமரா?… உலக மகா தப்பா?… உதயநிதி திடீர் கைதால்… மேடையில் கிளம்பிய சர்ச்சை… விஜய் அரசை கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.எஸ்.பாரதி…!”

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என திமுக…

42 minutes ago