பண்டைய காலத்தில் இருந்து கோவில்களில் ஏன் தெப்பக்குளம் வைத்து கட்டியிருக்கிறார்கள் தெரியுமா…? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல்…

Spread the love

இந்தியா ஒரு ஆன்மீக பூமி. பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களையும் சிறந்த சிற்பக்கலை கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் ஸ்தலங்களும் அதிகமாக இருக்கின்றது. இன்றளவும் அவை பராமரிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு பழமை வாய்ந்த கோவிலுக்கு நாம் சென்றாலும் அங்கு கட்டாயம் தெப்பக்குளம் ஒன்று இருக்கும். முன்னோர்கள் மன்னர்கள் ஏன் கோவிலோடு சேர்த்து தெப்பக்குளத்தை கட்டி இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

ஒவ்வொரு பழைய காலத்து கோவிலுக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். அதில் நிறைய படிக்கட்டுகளை கொண்டு கட்டி இருப்பர். அந்த காலத்தில் ஒரு ஊருக்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு என்று கோவில் இருந்திருக்கிறது. மழைநீர் சேகரிப்பு என்ற ஒன்றை மையப்படுத்தி தான் மன்னர்களும் முன்னோர்களும் தெப்பக்குளத்தை கட்டியிருக்கிறார்கள். எப்போதெல்லாம் ஊருக்குள் வறட்சி ஏற்படுகிறதோ அப்போது தெப்பக்குளத்தின் நீரை பயன்படுத்துவது போல் அமைத்திருக்கிறார்கள். மழைநீர் ஒரு சதவீதம் கூட வீணாகாமல் தெப்பக்குளத்தில் சேரும் வகையிலும் வடிவமைத்திருக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் அந்த தெப்பக்குளத்தில் இருக்கும் நீர் அசுத்தமாகாமல் அதுவே வடிகட்டி சுத்தமான நீரை தருவது போன்றும் வைத்திருக்கின்றனர். குளங்களில் உலர்ந்த இலைகள் குச்சிகள் போன்றவற்றை வைத்து வடிகட்டி குழாய்களையும் வைத்திருந்தனர். இதனால் சுத்தமான நீர் மட்டுமே தெப்பக்குளத்தில் சேர்க்கப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் கோவில் தெப்பக்குளத்தில் மீன்களை வளர்ப்பதற்கு காரணம் அது சுத்தமாக இருக்கிறதா இல்லை நஞ்சு ஏதும் கலந்து இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அதை வளர்த்திருக்கின்றனர்.

அப்படி அறிவியலுடன் கட்டப்பட்ட தெப்பக்குளத்தை எந்த மக்களும் அசுத்தப்படுத்தி விட கூடாது சுத்தமாக தான் அதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதற்கு பஞ்ச கல்யாணி தீர்த்தம் அஷ்ட தீர்த்தம் பத்ம தீர்த்தம் என ஆன்மீகத்துடன் மன்னர்கள் பெயரிட்டனர். இப்படி நம் முன்னோர்கள் அறிவியலை ஆன்மீகத்துடன் சேர்த்து வழங்கியதால் மக்கள் அதை பயபக்தியுடன் பின்பற்றினர். இதுதான் ஒவ்வொரு கோயில்களிலும் தெப்பக்குளம் அமைத்து ள்தாற்கான காரணம் ஆகும். நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவியலார்ளா இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமடை வைக்கிறது.

admin

Recent Posts

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

2 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

13 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

13 minutes ago

“அந்த ஒரு காரணத்திற்காக” பால்கனியிலிருந்து ரூ.25 லட்சத்தை அள்ளி வீசிய கணவன்… அதிர்ஷ்ட மழையில் நனைந்த வழிப்போக்கர்கள்… வைரலாகும் வீடியோ..!!

சீனாவின் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற…

37 minutes ago