மகாராஜா முதல் கல்கி வரை.. ஜூன் மாதத்தில் களமிறங்கும் படங்களின் லிஸ்ட்.. பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க போவது எந்த படம்..?

By Mahalakshmi on ஆனி 1, 2024

Spread the love

மே மாதம் முடிவடைந்துவிட்டது. ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த மாதம் தமிழ் சினிமாவில் ரிலீசாக போகும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த ஆறு மாதத்திலும் தமிழ் சினிமாவில் அந்த அளவுக்கு எந்த  திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெறாத நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் சில இந்த ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது.

   

இப்ப படங்களில் எந்த படங்கள் தமிழ் சினிமாவை காப்பாற்ற போகிறது என்பது தெரியவில்லை. ஹரா: காதல் நாயகனாக கொடி கட்டி பறந்த மோகன் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ஹரா. இந்த திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி இருக்கின்றார். இதில் மோகனுடன் ஷாருக்கான், யோகி பாபு, சிங்கம்புலி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஜூன் ஏழாம் தேதி வெளியாக உள்ளது.

   

 

அஞ்சாமை: மைனா படம் வித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கின்றார். நீட் தொடர்பான கதை அம்சத்துடன் உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி திரைக்கு வர உள்ளது.

வெப்பன்: குகன் சீனியப்பன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வெப்பன். சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படமும் ஜூன் ஏழாம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மகாராஜா: விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் மகாராஜா. குரங்கு பொம்மை திரைப்படத்தின் இயக்குனர் நிதிலன் இப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தில் மம்தா மோகந்தாஸ், அனுராக் காசிப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படமும் ஜூன் ஏழாம் தேதி திரைக்கு வரவுள்ளது.

கல்கி:  நாக் அஸ்வின் இயக்கத்தில் மிக பிரமாண்டமான பட்சத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன், பசுபதி, அமிதாபச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது.

மழை பிடிக்காத மனிதன்: விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த மேகா ஆகாஷ் ஹீரோயினியாகவும் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படமும் ஜூன் மாதம் தான் வெளியாக உள்ளது.