திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் (17). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அதே பகுதியை சேர்த்த பிரசாந்த் என்பவர் மாணவியை காதலிப்பதாக கூறி தொல்லைகொடுதுள்ளர். இதனால் மாணவியின் பெற்றோர் ஜோலார்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அங்கு இருந்து பள்ளிக்குச் சென்று வருமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
மாணவி எப்பொழுதும் பள்ளி முடிந்து சக்கரக்குப்பம் வழியாக தனது பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் சில நாட்களுக்கு முன் மாணவி பள்ளி முடித்துவிட்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதை அறிந்த பிரசாந்த் மாணவிக்கு தன்னை காதலிக்குமாறு மீண்டும் தொல்லை கொடுத்ததோடு தன்னுடைய 3 நண்பர்களையும் அழைத்துசென்றுள்ளார். அப்போது அவனது நண்பர்கள் மாணவியிடம் பிரசாந்தை காதலிக்குமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் மாணவி பிரசாந்தை காதலிக்க விருப்பமில்லாத நிலையில் அச்சத்தில் கூச்சல் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாலு பேரையும் பிடித்து அடித்தனர். எப்படியோ மக்களிடம் இருந்து நாலு பேரும் தப்பித்து பைக்கில் சென்றனர். இது குறித்து மாணவி தனது பெற்றவரிடம் தெரிவித்த இலையில் அவர்கள் ஜோலார்பேட்டை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று நான்கு பேரையும் விசாரித்தனர். அவர்கள் ஜோலார்பேட்டையை அடுத்த கோணநெறி குப்பத்தைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் பிரசாந்த் (26) மற்றும் அவரின் மூன்று நண்பர்களும் என கூறினார். அதில் மாணவிக்கு தொல்லை கொடுத்தது பிரசாந்த் என தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பிரசாந்த் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீதும் போஸ்கோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து திருப்பத்தூர் சிறையில் அடைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…
உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…
பிரபல கல்வி பயிற்சியாளரான கான் சார் (Khan Sir) மற்றும் அவரது பயிற்சி மையம் குறித்த உண்மைகளை மாணவி ஒருவர்…
இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…
திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…