உங்க வீட்டு ஃப்ரிட்ஜில் கெட்ட வாடை வருதா?.. இதை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க இனி கமகமன்னு இருக்கும்..!!

By Nanthini on ஆவணி 11, 2024

Spread the love

நம் வீட்டில் ஃப்ரிட்ஜை என்னதான் சுத்தமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் துர்நாற்றம் வீசுவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. சாதாரணமாக துடைப்பதன் மூலமாக இந்த வாசனையை எளிதில் நம்மால் நீக்கிவிடவும் முடியாது. வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் பிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டும். பிரிட்ஜில் வடியும் நீரை சேகரிக்கப்படுவதற்காக ஒரு பகுதி இருக்கும்.

   

அதில் சேகரிக்கப்படும் நீரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நன்றாக சோப்பு அல்லது பேக்கிங் சோடா போன்ற பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். பிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை நீக்க வினிகர் பெரும் உதவியாக இருக்கும். சிறிதளவு தண்ணீருடன் வினிகரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி ஃப்ரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் நன்றாக துடைக்க வேண்டும். வினிகர் வாசனை நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

   

 

வாரத்திற்கு ஒருமுறையாவது பிரிட்ஜை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நாம் வைக்கும் பொருட்களிலிருந்து சிதறும் உணவுப்பொருட்கள் ஃப்ரிட்ஜில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றில் இருந்து எஞ்சிய பொருள்களும் இருக்கலாம். எனவே வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்யும்போது நீங்கள் பயன்படுத்தும் டிஷ் வாஷில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சுத்தம் செய்தால் வாசனையாக இருக்கும். அதேசமயம் சுத்தம் செய்த பிறகு குறைந்தது 5 மணி நேரம் பிரிட்ஜ் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். பிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை சரி செய்ய ஒரு எலுமிச்சையை பயன்படுத்தலாம்.

எலுமிச்சைச் சாறை எல்லா இடங்களிலும் நன்றாக தேய்த்து அதன் பிறகு சுத்தமான துணியை கொண்டு துடைக்க வேண்டும். மேலும் பிரிட்ஜில் துர்நாற்றம் வீசாமல் இருக்க எந்த பொருட்களையும் அப்படியே வைத்து விடக்கூடாது. மீதமாக கூடிய உணவுகளை சேமிக்க கூடாது. காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை போடுவதற்கு சந்தைகளில் கிடைக்கக்கூடிய டப்பாக்கள் அல்லது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் பிரிட்ஜ் துர்நாற்றம் வீசாமல் நன்றாக இருக்கும்.