இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எளிதில் முடித்து விடுகிறோம். எந்த ஒரு தேவைக்கும் வெளியில் சென்று அலையாமல் ஆன்லைன் மூலமாக அனைத்து வசதிகளும் வந்து விட்டன.
அதன்படி இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இவை இல்லாமல் எந்த ஒரு சேவையையும் பெற முடியாது. அரசின் திட்டங்கள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் இந்த ஆவணங்கள் அவசியம் தேவைப்படுகிறது. தற்போது உங்கள் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டை வாட்ஸ் அப் மூலமாக எளிதில் டவுன்லோட் செய்யும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு முதலில் My Gov whatsapp ஹெல்ப்லைன் நம்பரை (9013151515) உங்கள் மொபைலில் சேமிக்க வேண்டும்.
பிறகு அந்த நம்பருக்கு Hi மெசேஜ் அனுப்பியவுடன் பதிலுக்கு நமஸ்தே என்று தொடங்கும் ஆட்டோமேட்டிக் மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.
அந்த மெசேஜ் இன் இறுதியில் Cowin service, DigiLocker services என இரண்டு சர்வீஸ்கள் இருக்கும்.
அதில் நீங்கள் டிஜி லாக்கர் சேவைகளை தேர்ந்தெடுத்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி யை என்டர் செய்து ஆதார் அல்லது பான் கார்டு எளிதில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய வசதி ஆவணங்களை எளிதாக அணுகுவதற்கும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவும்.
