பகீர்..! ஆவடியில் தொடர் மின்வெட்டை ஏற்படுத்திய சதி அம்பலம்… சிசிடிவி ஆதாரத்தை வெளியிட்ட அமைச்சர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆனி 9, 2026

Spread the love

சென்னை ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் மின்வெட்டுப் பிரச்சினைக்குக் காரணமான, மின்சார விநியோகப் பெட்டிகளில் (Pillar Boxes) இருந்து ஃப்யூஸ் கேரியர்களைத் (Fuse Carriers) திருடிய இரண்டு நபர்களைக் காவல்துறையினர் இன்று காலை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அண்மையில் ஆவடி மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் உள்ள பெட்டியிலிருந்து 14 ஃப்யூஸ் கேரியர்கள் திருடப்பட்டதால் அப்பகுதியில் பல மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வேண்டுமென்றே ஃப்யூஸ் கேரியர்களைத் திருடிச் செல்லும் சிசிடிவி (CCTV) காட்சிகளைச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதாரமாகப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

https://twitter.com/sunnewstamil/status/2064199516551827860/video/1

   

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அந்த இருவரும் திருடப்பட்ட 14 ஃப்யூஸ் கேரியர்களைச் செங்குன்றம் பகுதியில் வெறும் 1,500 ரூபாய்க்கு விற்றுள்ளதாகக் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், பிடிபட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு இரும்புப் பொருட்கள் மற்றும் வாகனத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் திட்டமிட்டு மின் தட்டுப்பாட்டை உருவாக்க இத்தகைய குற்றங்கள் செய்யப்படுகிறதா என்ற கோணத்திலும், திருடப்பட்ட பொருட்களை வாங்கிய நபர்கள் குறித்தும் ஆவடி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.