tnpsc

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வீட்டில் இருந்தே படிக்கலாம்…. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!

By Devi Ramu on தை 11, 2026

Spread the love

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு ‘கல்வித் தொலைக்காட்சி’ வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி, சீருடைப் பணியாளர் தேர்வு, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகள் எனப் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் இதில் விரிவாக விளக்கப்படும். வரும் ஜனவரி 12 முதல் 16-ஆம் தேதி வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், இதன் மறுஒளிபரப்பை மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மாணவர்கள் கண்டுகளிக்கலாம்.

தொலைக்காட்சி மட்டுமன்றி, அரசின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் (TN Career Service Employment) வழியாகவும் இந்தப் பயிற்சிகளைப் பெற முடியும். தேர்வுக்குத் தேவையான பாடக் குறிப்புகளை  அரசின் இணையதளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று அதிகக் கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு, அரசின் இந்த முன்னெடுப்பு நல்ல வாய்ப்பாக அமையும்.