இன்று முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பயண டோக்கன்.. எங்கெல்லாம் வழங்கப்படுகிறது, எப்படி பெறுவது..?

Spread the love

சென்னையில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பதற்காக அரசு சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த இலவச டோக்கன் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகின்றது.

இந்த டோக்கன்கள் பெறுவதற்கு இருப்பிடச் சான்று, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்விச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவையும் இரண்டு புகைப்படங்களும் எடுத்து வர வேண்டும். மேலும் இந்த டோக்கன்கள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர், சைதாப்பேட்டை, சென்டிரல் ரெயில் நிலையம், பிராட்வே, குரோம்பேட்டை, பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி எஸ்டேட், அய்யப்பன்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் ஓ.டி., ஆவடி, அயனாவரம், ஐ.சி.எப்., தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர், செங்குன்றம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி, பெரம்பூர், வள்ளலார் நகர், செம்மஞ்சேரி, திருவொற்றியூர், கிளாம்பாக்கம், குன்றத்தூர் ஆகிய 40 பணிமனை பேருந்து நிலையங்களில் வழங்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

விஜயபுராவில் 3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

8 seconds ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

36 minutes ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

38 minutes ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

52 minutes ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

1 மணத்தியாலம் ago

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… மாட்டின் உடலில் TVK வர்ணம் பூசிய கொடூரம்… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…

1 மணத்தியாலம் ago