தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது அமலாகும் என்பது குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தத் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விரிவான திட்டப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூடிய விரைவில் பெண்களுக்கான இந்த இலவசப் பேருந்து பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் இந்த முக்கிய வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் தவெக அரசு காட்டி வரும் தீவிரம் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
